மாவட்ட செய்திகள்

உல்லாசமாக இருந்த வீடியோவை முகநூலில் வெளியிடுவதாகஇளம்பெண்ணை மிரட்டிய பட்டதாரி வாலிபர் கைது + "||" + Young girl was intimidated Graduate youth arrested

உல்லாசமாக இருந்த வீடியோவை முகநூலில் வெளியிடுவதாகஇளம்பெண்ணை மிரட்டிய பட்டதாரி வாலிபர் கைது

உல்லாசமாக இருந்த வீடியோவை முகநூலில் வெளியிடுவதாகஇளம்பெண்ணை மிரட்டிய பட்டதாரி வாலிபர் கைது
உல்லாசமாக இருந்த வீடியோவை முகநூலில் வெளியிடுவதாக இளம்பெண்ணை மிரட்டிய பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி,

திருவள்ளூர் பத்தியால்பேட்டையை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்(வயது 24). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், வேலை தேடி வருகிறார். இவர், 2012-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரை திருநின்றவூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வந்தார்.

அப்போது அதே கல்லூரியில் தன்னுடன் படித்து வந்த சக மாணவியுடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. ஜெயப்பிரகாஷ் ஆசைவார்த்தைகள் கூறி அந்த மாணவியுடன் உல்லாசமாக இருப்பதுபோன்று வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படுகிறது.

தொல்லை

தற்போது அந்த மாணவி எம்.பி.ஏ. முடித்துவிட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். அதன்பிறகு அவர், ஜெயப்பிரகாசுடனான நட்பை துண்டித்துவிட்டதாக தெரிகிறது.

ஆனால் ஜெயப்பிரகாஷ், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அடிக்கடி அந்த பெண்ணை தொல்லை கொடுத்து வந்தார். அதற்கு அந்த பெண் மறுத்து விட்டார்.

கைது

இதில் ஆத்திரம் அடைந்த ஜெயபிரகாஷ், தன்னுடன் உல்லாசமாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என மிரட்டல் விடுத்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், இதுபற்றி தனது பெற்றோர்களிடம் கூறினார். அவர்கள், ஆவடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று ஜெயப்பிரகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.