மோளையாண்டிப்பட்டி, செட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் கல்விச்சீர் வழங்கும் விழா


மோளையாண்டிப்பட்டி, செட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் கல்விச்சீர் வழங்கும் விழா
x
தினத்தந்தி 15 March 2019 11:19 PM GMT (Updated: 15 March 2019 11:19 PM GMT)

மோளையாண்டிப்பட்டி, செட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது.

அரவக்குறிச்சி,

அரவக்குறிச்சி ஒன்றியம், மோளையாண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர்(பொறுப்பு) சுதா தலைமை தாங்கினார். ஆசிரிய பயிற்றுனர் தண்டபாணி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக டாக்டர் கண்ணன் கலந்து கொண்டு பேசினார். விழாவையொட்டி அப்பகுதி பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க பள்ளிக்கு தேவையான பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினர். இதில் ஊர் முக்கியஸ்தர்கள் சுஜாதா, கருப்புசாமி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பானுமதி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சத்யா, பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தலைமை ஆசிரியர் புஷ்பராணி வரவேற்றார். முடிவில் உதவி ஆசிரியர் வீரப்பன் நன்றி கூறினார்.

தரகம்பட்டி அருகே உள்ள செட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் செல்வக்குமாரி, ஊர் முக்கியஸ்தர் சுப்பன்செட்டியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் வரவேற்றார். இதில் இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் உள்பட பலர் ஒன்றாக சேர்ந்து பள்ளிக்கு தேவையான மேஜைகள், நாற்காலிகள், மின்விசிறி, கடிகாரம், தலைவர்கள் படங்கள் உள்ளிட்ட பொருட்களை ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க பள்ளிக்கு எடுத்து வந்தனர். பின்னர் இந்த பொருட்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டது. பின்னர் நடந்த விழாவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செங்காட்டுப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் பிரான்சிஸ், உதவி ஆசிரியை பாக்கியசெல்வி, சத்துணவு பணியாளர்கள், ஊர்முக்கியஸ்தர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story