திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் முள்ளாட்சி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது . திருவிழாவையொட்டி அம்மனுக்கு, அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பக்தர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி, பால் குடம், அலகு காவடி, செடில் காவடி எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலின் எதிரே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தீக்குண்டம்
பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகையன், கணக்கர் சீனிவாசன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story