நெல்லையில், தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் - கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது


நெல்லையில், தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் - கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 20 March 2019 3:54 AM IST (Updated: 20 March 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது.

நெல்லை,

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்க நெல்லை மாவட்டத்திற்கு தேர்தல் செலவு பார்வையாளர்களாக 4 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். பாளையங்கோட்டை, ராதாபுரம், நாங்குநேரி ஆகிய சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட செலவுகளை கண்காணிக்க ராஜா கோஷ் என்பவரும், ஆலங்குளம், நெல்லை, அம்பை ஆகிய சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட செலவுகளை கண்காணிக்க ஏ.பி.மணி என்பவரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சங்கரன்கோவில், தென்காசி, கடையநல்லூர் ஆகிய சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட செலவுகளை கண்காணிக்க கபில் மண்டல் என்பவரும், வாசுதேவநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட செலவுகளை கண்காணிக்க சீல் ஆஷீஸ் என்பவரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தேர்தல் கட்டுப்பாட்டு மையம், கணக்கு குழு அறை, சான்றிதழ் வழங்குதல் மற்றும் கண்காணிப்பு குழு அறைகளை பார்வையிட்டு கேட்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து தேர்தல் செலவு பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 2 தேர்தல் செலவின பார்வையாளர்கள் வீதம் நமது மாவட்டத்திற்கு 4 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். வேட்பாளர்கள் செலவு குறித்து செலவின பார்வையாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம். ராஜாகோஷ் செல்நம்பர் 94597 00850, ஏ.பி.மணி செல்நம்பர் 98330 76316, கபில் மண்டல் செல்நம்பர் 94773 31207, சீல் ஆஷீஸ் செல்நம்பர் 99575 53101 ஆகும். இந்த எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மணிஷ்நாரணவரே, தேர்தல் தாசில்தார் புகாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story