மாவட்ட செய்திகள்

மண்டைக்காடு அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Fisherman committed suicide by hanging a fisherman near the myth

மண்டைக்காடு அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

மண்டைக்காடு அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை
மண்டைக்காடு அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மணவாளக்குறிச்சி,

மண்டைக்காடு அருகே புதூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் குரூஸ் அந்தோணி (வயது 72), மீன்பிடி தொழிலாளி. இவருடைய மனைவி சேசம்மாள். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால், இருவரும் தனியாக வசித்து வந்தனர்.


கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சேசம்மாள் இறந்து விட்டார். இதனால், அவர் மனைவியின் தங்கையான சகாயமேரி வீட்டில் வசித்து வந்தார். முதுமையின் காரணமாகவும், மனைவி இறந்து விட்டதாலும், முதுமையில் இருக்கும் தன்னை கவனிக்க பிள்ளைகள் இல்லாததாலும் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாத போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய சகாயமேரி, குரூஸ் அந்தோணி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து மண்டைக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. அம்மாபேட்டை அருகே விஷம் குடித்து டாக்டர் தற்கொலை குடும்ப தகராறில் விபரீத முடிவு
அம்மாபேட்டை அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்து டாக்டர் தற்கொலை செய்துகொண்டார்.
2. லால்குடியில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை குடும்ப தகராறில் துயர முடிவு
லால்குடியில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். குடும்ப தகராறு காரணமாக இந்த துயர முடிவை தேடிக்கொண்டனர்.
3. பாலியல் பலாத்கார முயற்சியில் தப்பிய 10-ம் வகுப்பு மாணவி, தீக்குளித்து தற்கொலை 4 பேருக்கு வலைவீச்சு
திருவாரூர் அருகே பாலியல் பலாத்கார முயற்சியில் இருந்து தப்பிய 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. எருமப்பட்டி அருகே பெண்ணை கொன்றுவிட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
எருமப்பட்டி அருகே பெண்ணை கழுத்தை நெரித்துக்கொன்று விட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5. கடன் தொல்லையால் காண்டிராக்டர் தற்கொலை
கடன் தொல்லையால் காண்டிராக்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.