தான்றீஸ்வரத்தில் ஜல்லிக்கட்டு மாடுகள் முட்டியதில் 8 பேர் காயம்


தான்றீஸ்வரத்தில் ஜல்லிக்கட்டு மாடுகள் முட்டியதில் 8 பேர் காயம்
x
தினத்தந்தி 28 March 2019 4:45 AM IST (Updated: 27 March 2019 11:01 PM IST)
t-max-icont-min-icon

தான்றீஸ்வரத்தில் நடை பெற்ற ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 8 பேர் காயமடைந்தனர்.

அன்னவாசல், 

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்த தான் றீஸ்வரத்தில் உள்ள சத்ரு சம் கார மூர்த்தி கோவில் திரு விழாவை முன்னிட்டு ஒவ் வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதி கிராமத்தினர் முடிவு செய்தனர். அதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அதற்கான பணிகள் நிறைவு பெற்றது. இதையொட்டி தான்றீஸ்வரத் தில் உள்ள கோவில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட் டது. முதலில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத் துவ பரிசோதனை நடைபெற் றது. ஜல்லிக்கட்டு போட்டியை உறுதி மொழியுடன் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாசு தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதைத்தொடர்ந்து வாடிவாச லில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 101 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப் போது பொதுமக்கள் கைத் தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டி தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக் கோட்டை, சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர் உள் ளிட்ட பகுதிகளில் இருந்து 495 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் முட்டியதில் தான்றீஸ்வரத்தை சேர்ந்த பால்ராஜ், சிவா உள்பட 8 பேர் காயமடைந்தனர். அவர் களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக் கப்பட்டது. இதில் படுகாய மடைந்த 2 பேர் மட்டும் சிகிச்சைக்காக புதுக் கோட்டை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் காளை களை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர் களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்படவில்லை.

ஜல்லிக்கட்டை காண சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இலுப்பூர் வட்டாட்சியர் முருகப்பன் மற்றும் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவ கங்கை, கரூர், விராலிமலை, கீரனூர், இலுப்பூர், அன்ன வாசல், தான்றீஸ்வரம் உள் ளிட்ட பகுதியில் இருந்து திர ளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் தான்றீஸ்வரம் பொதுமக்கள் செய்திருந்தனர்.

ஜல்லிக்கட்டில் நிபந்தனை களின்படி முறையாக நடைபெறுகிறதா என்பதை கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தனர். இதில் இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிகா மணி தலைமையில், அன்ன வாசல் போலீஸ் இன்ஸ்பெக் டர் செந்தில்குமார் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story