அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு 10 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரெயில் இயக்க நடவடிக்கை தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வாக்குறுதி


அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு 10 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரெயில் இயக்க நடவடிக்கை தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வாக்குறுதி
x
தினத்தந்தி 31 March 2019 9:30 PM GMT (Updated: 31 March 2019 8:06 PM GMT)

அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு 10 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் கூறினார்.

அரக்கோணம்,

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளராக எஸ்.ஜெகத்ரட்சகன் நேற்று அரக்கோணம், எஸ்.ஆர்.கேட் பகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார்.

வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று அரக்கோணம் நகரத்தில் உள்ள 36 வார்டுகளில் பிரசாரம் செய்தனர்.

மேலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று தி.மு.க.விற்கு வாக்கு கேட்டு, துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்கள்.

வார்டு பகுதிகளில் தெருக்களில் நின்று கொண்டிருந்த பெண்கள், இளைஞர்கள், முதியவர்களிடம் ஜீப்பில் இருந்து ஜெகத்ரட்சகன் இறங்கி சென்று வாக்குகள் சேகரித்தார். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தீர்க்கப்படாத நீண்ட கால குறைகள் குறித்து தெரிவித்தனர்.

அப்போது ஜெகத்ரட்சகன் பேசுகையில், அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு 10 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரெயில் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து விரைவு, அதிவிரைவு ரெயில்களும் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அரக்கோணம் நகரில் உள்ள அனைத்து தெருக்களிலும் உயர்மின்கோபுர விளக்குகள் அமைக்கப்படும், அரக்கோணம் நகரத்தில் சூப்பர் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

பிரசாரத்தின் போது மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி, மாவட்ட பொருளாளர் மு.கண்ணையன், அரக்கோணம் நகர பொறுப்பாளர் வி.எல்.ஜோதி, மாவட்ட துணை செயலாளர் என்.ராஜ்குமார், அரக்கோணம் ஒன்றிய செயலாளர் ஆர்.தமிழ்செல்வன், நகர துணை செயலாளர்கள் அன்புலாரன்ஸ், எஸ்.மணி, நகர காங்கிரஸ் தலைவர் துரைசீனிவாசன், மாவட்ட துணைதுதலைவர் கோபண்ணாரவி, மாநில செயற்குழு உறுப்பினர் பி.ராஜ்குமார், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் கவுதம், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் வக்கீல் என்.தமிழ்மாறன் உள்பட காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்டுகள் ஆகிய கட்சிகளை சேர்ந்த மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story