நீடாமங்கலம் பகுதியில், வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு


நீடாமங்கலம் பகுதியில், வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 5 April 2019 11:15 PM GMT (Updated: 5 April 2019 8:05 PM GMT)

நீடாமங்கலம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு செய்தார்.

திருவாரூர்,

திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக இருப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இதனை திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொது பார்வையாளர் சந்திரகாந்த் டாங்கே, நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது அங்குள்ள பதிவேட்டையும், பாதுகாப்பு பணியில் சூழற்சி முறையில் போலீசார் ஈடுபடுத்தப் பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து நீடாமங்கலம் வட்டம் ஊர்குடி, பத்தூர், அரசமங்கலம், பெருமங்கலம் ஆகிய கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு குடிநீர், கழிவறை, மின்சாரம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா? என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது வாக்குப்பதிவு அறையில் கூடுதலாக மின்விளக்கு வசதி ஏற்படுத்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Next Story