மண்டியாவில் எனது மகனை தோற்கடித்து அரசியல் ரீதியாக என்னை ஒழித்துக்கட்ட முயற்சி குமாரசாமி சொல்கிறார்


மண்டியாவில் எனது மகனை தோற்கடித்து அரசியல் ரீதியாக என்னை ஒழித்துக்கட்ட முயற்சி குமாரசாமி சொல்கிறார்
x
தினத்தந்தி 8 April 2019 3:45 AM IST (Updated: 8 April 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

மண்டியாவில் எனது மகனை தோற்கடித்து அரசியல் ரீதியாக என்னை ஒழித்துக்கட்ட சிலர் முயற்சி செய்கிறார்கள் என்று குமாரசாமி கூறினார்.

பெங்களூரு, 

முதல்-மந்திரி குமாரசாமி மங்களூருவில் நேற்று நிருபர் களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மண்டியா தொகுதியில் சில காங்கிரஸ் தலைவர்கள் எனது மகனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்கள். சிலர் வேலை செய்யவில்லை. அதை பற்றி நான் கவலைப்படவில்லை. மண்டியாவில் எனது மகனை தோற்கடித்து, அரசியல் ரீதியாக என்னை ஒழித்துக்கட்ட சிலர் முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் மண்டியா மக்கள் அத்தகையவர்களை ஆதரிக்க மாட்டார்கள். மண்டியாவில் 8 தொகுதிகளிலும் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தான் உள்ளனர். அது தவிர எம்.பி,. 3 எம்.எல்.சி.க்களும் இருக்கிறார்கள்.

எங்கள் கட்சியின் வெற்றிக்கு அவர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவார்கள். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. துமகூரு, ஹாசனில் கூட்டணி கட்சியில் இன்னும் சிலர் அதிருப்தியில் உள்ளனர்.

எங்கள் கூட்டணி வேட்பாளர்களை நாங்கள் கைவிட மாட்டோம்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.
1 More update

Next Story