எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் உதவி பேராசிரியர் பணியிடங்கள்


எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் உதவி பேராசிரியர் பணியிடங்கள்
x
தினத்தந்தி 8 April 2019 7:46 AM GMT (Updated: 2019-04-08T13:16:13+05:30)

எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் என அழைக்கப் படுகிறது. இதன் மருத்துவமனை- கல்லூரிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்படுகிறது. தற்போது பல்வேறு எய்ம்ஸ் மையங்களில் பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் கிளையில் இந்த பணிகளுக்கு 69 இடங்கள் உள்ளன. அனஸ்தீசியாலஜி, டெர்மடாலஜி, இ.என்.டி., ஜெனரல் மெடிசின், ஜெனரல் சர்ஜரி, ஆப்தமாலஜி, ஆர்தோபெடிக்ஸ், பீடியாட்ரிக்ஸ், பிசியாலஜி, பல்மோனரி மெடிசின், ரேடியோ டயக்னாஜிஸ், ரேடியோ தெரபி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பிரிவில் பணியிடங்கள் உள்ளன.

குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை ஏப்ரல் 15-ந் தேதி முதல் நிரப்பி அனுப்பலாம். 30-5-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். 7-2-2018-ல் அறிவிப்பு வெளியான 24 பணியிடங்களுக்கு மட்டும் சில மாறுதல்களுடன் மறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்த்துவிட்டு தகுதியானவர்கள், 30-4-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். இவை பற்றிய விவரங்களை www.aiimsmangalagiri.edu.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

கோரக்பூர்

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் எய்ம்ஸ் கிளையில் பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 43 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணிவாரியான விவரம் : பேராசிரியர் - 8 இடங்கள், கூடுதல் பேராசிரியர் - 10 இடங்கள், இணை பேராசிரியர் - 11 இடங்கள், உதவி பேராசிரியர் - 14 இடங்களும் உள்ளன. அனட்டாமி, பயோகெமிஸ்ட்ரி, பிஸியாலஜி, ஜெனரல் மெடிசின், ஜெனரல் சர்ஜரி, கைனகாலஜி, இ.என்.டி., டெர்மடாலஜி, ரேடியோ டயக்னாசிஸ், சைகியாட்ரி, ஆர்தோபெடிக்ஸ் உள்ளிட்ட 13 பாடப்பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.

இந்த பாடங்களில் முதுநிலை மருத்துவ படிப்பு படித்தவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். பேராசிரியர், கூடுதல் பேராசிரியர் பணிக்கு 58 வயதுக்கு உட்பட்டவர்களும், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணிக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய அறிவிப்பு 22-3-2019 தேதியில் வெளியாகி உள்ளது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.aiimsjodhpur.edu.in/aiimsgorakhpur என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

ஜோத்பூரில் 139 பணிகள்

இதேபோல ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் கிளையில் குரூப்-ஏ, தரத்திலான பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஓய்வு பெற்றவர்களையும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தவும் குறிப்பிட்ட இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 41 மருத்துவ பிரிவில் பணியிடங்கள் உள்ளன. இதில் பேராசிரியர் பணிக்கு 36 இடங்களும், கூடுதல் பேராசிரியர் பணிக்கு 31 இடங்களும், இணை பேராசிரியர் பணிக்கு 44 இடங்களும், உதவி பேராசிரியர் பணிக்கு 28 இடங்களும் உள்ளன.

முதுநிலை மருத்துவ படிப்பு படித்தவர்களுக்கும், மருத்துவ முனைவர் பட்டம் பெற்றவர் களுக்கும் பணியிடங்கள் உள்ளன.

ஓய்வு பெற்றவர்களுக்கான பணியிடங் களுக்கு 70 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற பணியிடங்களில் 58 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.3 ஆயிரம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இந்த கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு உள்ளது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் Website: http://www.aiimsjodhpur.edu.in/ என்ற இணைய தளத்தில் முழுமையான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள் 30-4-2019-ந் தேதியாகும்.


Next Story