கும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையில் 175 கிலோ தங்ககட்டிகள் சிக்கின


கும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையில் 175 கிலோ தங்ககட்டிகள் சிக்கின
x
தினத்தந்தி 10 April 2019 3:45 AM IST (Updated: 10 April 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையில் 175 கிலோ தங்ககட்டிகள் சிக்கின.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத் தலைமையில் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் துப்பாக்கி ஏந்திய தனியார் காவலர்கள் பாதுகாப்புடன் 175 கிலோ தங்ககட்டிகள் கொண்டு வரப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த தங்ககட்டிகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் இருந்து சென்னை தியாகராயநகருக்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.

ரிசர்வ் வங்கி அனுமதியுடன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தை தனியார் நிறு வனம் ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் உள்ள குடோனில் வைத்து அங்கிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்வதாக மினி வேனில் வந்தவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் அந்த தங்ககட்டிகள் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் உதவி தேர்தல் அதிகாரி பார்வதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story