கமல்ஹாசன் குமரிக்கு 14–ந் தேதி வருகை நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்


கமல்ஹாசன் குமரிக்கு 14–ந் தேதி வருகை நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
x
தினத்தந்தி 10 April 2019 11:15 PM GMT (Updated: 10 April 2019 3:03 PM GMT)

வருகிற 14–ந் தேதி மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் குமரி மாவட்டம் வருகிறார். பின்னர் அவர் நாகர்கோவிலில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

நாகர்கோவில்,

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக சென்னையைச் சேர்ந்த எபினேசர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கமல்ஹாசன் வருகிற 14–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரசாரம் செய்கிறார்.

இதற்காக அவர் நெல்லையில் இருந்து அன்று பிற்பகல் 2 மணிக்கு குமரிக்கு வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான காவல்கிணறில் குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சசி, வேட்பாளர் எபினேசர் மற்றும் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் வரவேற்பு அளிக்கிறார்கள்.

வரவேற்பை ஏற்றுக்கொண்டதும் கமல்ஹாசன் அங்கிருந்து கன்னியாகுமரி செல்கிறார். அங்குள்ள ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் மாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெறும் மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டு வேட்பாளர் எபினேசருக்கு டார்ச் லைட் சின்னத்தில் வாக்குகள் கேட்டு உரையாற்றுகிறார்.

Next Story