பெரம்பலூர் மாவட்டத்தில் போலீசாருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது
பெரம்பலூர் மாவட்டத்தில் போலீசாருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.
பெரம்பலூர்,
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள போலீசார், ஊர்க்காவல் படை வீரர்கள் ஆகியோருக்கு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெரம்பலூர் மாவட்ட உதவி தேர்தல் அதிகாரி விஸ்வநாதன் வழங்கினார். நேற்று 488 தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டன. இதில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சில போலீசார், ஊர்க்காவல் படை வீரர்கள், பலர் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தபால் ஓட்டுகளை, ஒரு அறையில் தனியாக வைக்கப்பட்டிருந்த பெட்டியில் செலுத்தினர்.
தமிழகம், புதுச்சேரியில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள அரசு அலுவலர்கள், போலீசார், ஊர்க்காவல் படை வீரர்கள், வீடியோ கிராபர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கும், குன்னம் சட்டமன்ற தொகுதி சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டவையாகும். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த வாக்கச்சாவடி அரசு அலுவலர்கள் தங்களது தபால் ஓட்டுகளை செலுத்தி வருகின்றனர்.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள போலீசார், ஊர்க்காவல் படை வீரர்கள் ஆகியோருக்கு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெரம்பலூர் மாவட்ட உதவி தேர்தல் அதிகாரி விஸ்வநாதன் வழங்கினார். நேற்று 488 தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டன. இதில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சில போலீசார், ஊர்க்காவல் படை வீரர்கள், பலர் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தபால் ஓட்டுகளை, ஒரு அறையில் தனியாக வைக்கப்பட்டிருந்த பெட்டியில் செலுத்தினர்.
Related Tags :
Next Story