மாவட்ட செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்குப்பதிவு + "||" + The police involved in the electoral process Postal turnout

திருவாரூர் மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்குப்பதிவு

திருவாரூர் மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்குப்பதிவு
திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்குப்பதிவு செய்தனர்.
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாகை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தபால் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆனந்த் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் தபால் வாக்களிப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, போலீசார் தபால் வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் 145 போலீசாரும், திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 366 போலீசாரும், நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் 224 போலீசாரும், மன்னார்குடி சட்டமன்ற தொகுயில் 231 போலீசாரும் என மொத்தம் 966 போலீசார் தபால் வாக்கு அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பி்ரண்டு துரை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) உமாமகேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பால்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.