மாவட்ட செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் வருகையை கண்டித்து காஞ்சீபுரத்தில் தி.மு.க.வினர் மறியல் + "||" + O. Panneerselvam condemned the visit DMK stuck in Kancheepuram

ஓ.பன்னீர்செல்வம் வருகையை கண்டித்து காஞ்சீபுரத்தில் தி.மு.க.வினர் மறியல்

ஓ.பன்னீர்செல்வம் வருகையை கண்டித்து காஞ்சீபுரத்தில் தி.மு.க.வினர் மறியல்
காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து காஞ்சீபுரம் காந்திரோடு தேரடி அருகே பிரசாரம் செய்வதற்காக அக்கட்சியினர் கூடியிருந்தனர்.
காஞ்சீபுரம்,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் நேற்று காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து காஞ்சீபுரம் காந்திரோடு தேரடி அருகே பிரசாரம் செய்வதற்காக அக்கட்சியினர் கூடியிருந்தனர். அப்போது, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காந்திரோடு தேரடி அருகே ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தருவதாக இருந்தது. இதுகுறித்து தகவல் அறி்ந்த தி.மு.க.வினர் எங்களுக்கு இந்த இடத்தில் போலீஸ் அனுமதி கொடுத்துவிட்டு நாங்கள் இருக்கும் இடம் அருகே துணை முதல்-அமைச்சர் வருகை தருகிறார் என்று கூறி தேரடி அருகே திடீரென காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.


ஓ.பன்னீர்செல்வம் கார் மூலம் தேரடி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. போலீசாரின் சமரச பேச்சுவார்த்தையை ஏற்று தி.மு.க.வினர் போராட்டத்தை கைவிட்டனர். ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் முடித்து சென்றபிறகு உதயநிதி ஸ்டாலின் அந்த பகுதியில் பிரசாரம் செய்தார்.