மாவட்ட செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி அருகேடாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசார வேன் மீது கல்வீச்சுஅ.தி.மு.க., பா.ம.க.வினர் சாலை மறியல் + "||" + Near Pappirippatti Dr. Anbumani Ramadoss was stoned on the campaign van ADMK, PMK, road stroke

பாப்பிரெட்டிப்பட்டி அருகேடாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசார வேன் மீது கல்வீச்சுஅ.தி.மு.க., பா.ம.க.வினர் சாலை மறியல்

பாப்பிரெட்டிப்பட்டி அருகேடாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசார வேன் மீது கல்வீச்சுஅ.தி.மு.க., பா.ம.க.வினர் சாலை மறியல்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பிரசாரத்திற்கு சென்ற வேட்பாளர்கள் டாக்டர் அன்புமணி ராமதாஸ், கோவிந்தசாமி ஆகியோர் வேன் மீது மர்ம ஆசாமிகள் கல்வீசினர். இதனால் அ.தி.மு.க., பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொம்மிடி,

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் கோவிந்தசாமி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மெணசி பகுதியில் பிரசாரத்திற்கு சென்றனர். அப்போது மர்ம ஆசாமிகள் யாரோ வேட்பாளர்கள் சென்ற பிரசார வேன் மீது கல்வீசினர். இதனால் வேட்பாளர்கள் அன்புமணி ராமதாஸ், கோவிந்தசாமி ஆகியோர் மெணசி பகுதியில் பிரசாரத்தை ரத்து செய்து விட்டு புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர், பா.ம.க. வினர் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மெணசியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பிரசார வேன் மீது கல்வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். மர்ம ஆசாமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். வேட்பாளர்கள் சென்ற பிரசார வேன் மீது கல்வீசிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவையில் பரபரப்பு, அந்தோணியார் சொரூபம் மீது கல்வீச்சு - போலீஸ் விசாரணை
கோவையில் அந்தோணியார் சொரூபம் மீது கல்வீசியதால், கண்ணாடிக்கூண்டு உடைந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
2. முன்விரோத தகராறு காரணமாக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உறவினர்களுக்கிடையே மோதல்- கல்வீச்சு
முன்விரோத தகராறு காரணமாக உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கல்வீசி தாக்கி கொண்டனர். இதனால் நோயாளிகள் ஓட்டம் பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
3. தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்களுக்கு அராஜகம்– கட்டப்பஞ்சாயத்து மட்டுமே தெரியும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்களுக்கு அராஜகம் மற்றும் கட்டப்பஞ்சாயத்து மட்டுமே தெரியும் என பவானியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பா.ம.க. இளைஞர் அணி மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டிப்பேசினார்.
4. தேர்தல் பிரசாரத்தில் கண்ணீர் விட்டு அழுத அன்புமணி ராமதாஸ்
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் அன்புமணி, தேர்தல் பிரசாரத்தின் போது கண்கலங்கி அழுத சம்பவம் பொதுமக்களை நெகிழச் செய்தது.
5. நாகர்கோவிலில் போலீஸ் புறக்காவல் நிலையத்தில் கல்வீச்சு அரசு பஸ்சையும் சேதப்படுத்தியதால் பரபரப்பு
நாகர்கோவிலில் போலீஸ் புறக்காவல் நிலையத்தில் கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. அரசு பஸ்சையும் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.