குழந்தையின் சேட்டையால் 49 ஆண்டுகள் திறக்க முடியாமல் போன ஐபேடு


குழந்தையின் சேட்டையால் 49 ஆண்டுகள் திறக்க முடியாமல் போன ஐபேடு
x
தினத்தந்தி 15 April 2019 12:29 PM GMT (Updated: 15 April 2019 12:29 PM GMT)

செல்போனை குழந்தைகளிடம் விளையாட கொடுக்கும் பெற்றோரை யோசிக்க வைக்கும் விதமாக அமெரிக்காவில் நடந்த வினோத நிகழ்வு இது.

குழந்தைகளுக்கு செல்போன்தான் முக்கிய விளையாட்டுப் பொருளாக இருக்கிறது. தவழத் தொடங்கியது முதலே செல்போன் வெளிச்சம் குழந்தைகளை ஈர்த்துவிடுகிறது. மழலை வார்த்தைகளை கேட்டு ரசிப்பதற்காக குழந்தைகளிடம் செல்போன்களை பேசக் கொடுப்பது வாடிக்கை யாகிவிட்டது. இப்படியாக வளரத் தொடங்கும் குழந்தைகள், செல்போன் ரைம்ஸ்கள், விளையாட்டுகள், கார்ட்டூன் தொடர் களிலும் மூழ்கிப்போகின்றன.

ஆனால் குழந்தைகளுக்கு செல்போன்களின் பல்வேறு சேவைகளை பயன்படுத்தத் தெரியாது என்பதே உண்மை. அமெரிக்காவில் அப்பாவின் ஐபேடை, பாஸ்வேர்டு போட்டு திறக்கத் தெரியாத 3 வயது குழந்தையால் அந்த ஐபேடு திறக்க முடியாத அளவுக்கு மூடிக் கொண்டது. அந்தக் குழந்தை மீண்டும் மீண்டும் தவறான பொத்தான்களை அழுத்தி விளையாடியதால் அது மிகச்சிக்கலாக மாறிவிட்டது. ஆமாம், அதை 49 ஆண்டுகளுக்கு இனிமேல் திறக்கவே முடியாதவகையில்மூடிக் கொண்டுவிட்டது.

2 கோடியே 55 லட்சத்து 36 ஆயிரத்து 442 நிமிடங்கள் கழித்து திரும்ப திறக்க முயற்சி செய்யுங்கள் என்ற தகவல் மட்டுமே திரையில் காட்டப்படுகிறது. இது சுமார் 49 ஆண்டு களுக்கு சமமான நேரமாகும். இதனால் சரியான பாஸ்வேர்டு தெரிந்தும் அவரது தந்தையால் ஐபேடை திறக்க முடியவில்லை. ஐபேடு காட்டும் தகவலை புகைப்படமாக எடுத்த அவர் ஆப்பிள் நிறுவனத்தினரை தொடர்பு கொண்டார். அவர்களும் அதை திறக்க வழியில்லை என்று கைவிரித்து விட்டனர். மாற்று வழியில் திறக்க முயன்றால் அதில் சேமிக்கப் பட்டுள்ள தகவல்கள் அழிந்து விடும் என்று எச்சரித்துள்ளனர்.

குழந்தைகளிடம் போனை விளை யாட கொடுப்பவர்களும், பேட்டன் லாக் மற்றும் நம்பர் லாக் போட்டிருக் கிறோம் என்ற நம்பிக்கையில் குழந்தை களிடம் போனை கொடுப்பவர்களும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே இந்த சம்பவம் விளக்குகிறது.

Next Story