மாவட்ட செய்திகள்

ரிஷிவந்தியம் பகுதியில், தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் வாக்குசேகரிப்பு + "||" + In the Rishivantiya area, DMDK.Candidate LK.Sudheesh vote collection

ரிஷிவந்தியம் பகுதியில், தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் வாக்குசேகரிப்பு

ரிஷிவந்தியம் பகுதியில், தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் வாக்குசேகரிப்பு
ரிஷிவந்தியம் பகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ரிஷிவந்தியம்,

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். இவர் தே.மு.தி.க.வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்று ரிஷிவந்தியம் அருகே உள்ள பாசாருக்கு சென்ற எல்.கே.சுதீஷ், வீதி வீதியாக நடந்து சென்று முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதேபோல் அந்தியூர், குன்னியூர், தாரணாபுரி, ரிஷிவந்தியம், வெங்கலம், முட்டியம், மண்டகப்பாடி, பிரிவிடையாம்பட்டு, முனிவாழை ஆகிய கிராமங்களுக்கும் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் சென்று வாக்கு சேகரித்தார்.

இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அருணகிரி, மாவட்ட விவசாய அணி செயலாளர் கதிர் தண்டபாணி, கட்சி நிர்வாகிகள் காந்தி, முனிவாழை சேட்டு, சேகர், கஜேந்திரன், குமார், சலீம், ஏழுமலை, கண்ணன், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.கோவிந்தன், ஒன்றிய செயலாளர்கள் சாமிதுரை, அஞ்சாமணி, பா.ம.க. நிர்வாகிகள் மணி, ராஜேஷ், பா.ஜ.க. நிர்வாகிகள் மாரிமுத்து, சுப்பிரமணி, பரசுராமன், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்துக்கு அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க பாடுபடுவேன் - கள்ளக்குறிச்சி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் பேச்சு
தமிழகத்துக்கு அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க பாடுபடுவேன் என்று கள்ளக்குறிச்சி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.