கீரனூரில் அ.தி.மு.க. பிரசாரத்தின் போது அ.ம.மு.க.வினர் புகுந்ததால் பரபரப்பு


கீரனூரில் அ.தி.மு.க. பிரசாரத்தின் போது அ.ம.மு.க.வினர் புகுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 April 2019 4:15 AM IST (Updated: 17 April 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வினர் வாக்கு சேகரித்தபோது, அ.ம.மு.க. வினர் பரிசு பெட்டகத்திற்கு வாக்கு சேகரித்து கொண்டே அ.தி.மு.க.வினர் கூட்டத்திற்குள் புகுந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கீரனூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவுபெற்றது. இதனால் நேற்று மாலை புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தீவிரமாக வாக்கு சேகரித்தனர். இதேபோல் கீரனூரில் அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி கட்சியினர், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மற்றும் அ.ம.மு.க. வினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் அனைத்து கட்சியினரும் கீரனூர் காந்திசிலை பகுதியில் திரண்டு வாக்கு சேகரித்தனர். அ.தி.மு.க.வினர் வாக்கு சேகரித்தபோது, அ.ம.மு.க. வினர் பரிசு பெட்டகத்திற்கு வாக்கு சேகரித்து கொண்டே அ.தி.மு.க.வினர் கூட்டத்திற்குள் புகுந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் சம்பவ இடத்திற்கு வந்து அ.தி.மு.க. கூட்டணியினரை பஸ் நிலைய பகுதிக்கும், அ.ம.மு.க.வினரை புதுக்கோட்டை சாலைக்கும் சென்று பிரசாரத்தை முடித்து கொள்ளுமாறு அனுப்பி வைத்தார்.

Next Story