மாவட்ட செய்திகள்

கூத்தாநல்லூர் அருகே தனியார் பஸ்-சரக்கு வேன் மோதல்; 3 பேர் படுகாயம் + "||" + Private bus-cargo van collision near Koothanallur 3 people were injured

கூத்தாநல்லூர் அருகே தனியார் பஸ்-சரக்கு வேன் மோதல்; 3 பேர் படுகாயம்

கூத்தாநல்லூர் அருகே தனியார் பஸ்-சரக்கு வேன் மோதல்; 3 பேர் படுகாயம்
கூத்தாநல்லூர் அருகே தனியார் பஸ்சும், சரக்கு வேனும் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கூத்தாநல்லூர்,

திருவாரூரில் இருந்து மன்னார்குடி நோக்கி நேற்று ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. கூத்தாநல்லூர் அருகே உள்ள கோரையாறு என்ற இடத்தில் சென்றபோது எதிரே மன்னார்குடியில் இருந்து கூத்தாநல்லூர் நோக்கி வந்த சரக்கு வேனும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.


இதில் சரக்கு வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. அதன் டிரைவர் பூதமங்கலம் கீழகண்ணுச்சாங்குடியை சேர்ந்த தினேஷ் (வயது24), முருகையன் (40), சிவகுமார்(40) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கவிழ்ந்த சரக்கு வேனில் சிக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை மாவட்ட அதிகாரி முருகேசன், கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பிவேந்திரன், நிலைய போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம், தீயணைப்பு படை வீரர்கள் சம்பத்குமார், செல்வராஜுலு ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று சரக்கு வேனில் சிக்கிய தினேஷ், முருகையன், சிவகுமார் ஆகிய 3 பேரையும் மீட்டனர்.

இதையடுத்து 3 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல அதே பகுதியில் வெண்ணாற்றின் கரையோரத்தில் கார் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்தது. அதில் காருக்குள் சிக்கிய 8 பேரையும் தீயணைப்பு வீரர்கள் காயமின்றி மீட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சாலையோர சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: மாணவர்கள் 2 பேர் பலி இரணியல் அருகே பரிதாபம்
இரணியல் அருகே சாலையோர சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
2. மொபட்-மினி லாரி மோதல்; பெண் சாவு தாயின் உடலை 2 மணி நேரமாக நடுரோட்டில் வைத்து கதறிய மகன்
திருவெறும்பூர் அருகே மொபட்- மினி லாரி மோதிய விபத்தில் பெண் தலைநசுங்கி உயிரிழந்தார். அவருடைய உடலை 2 மணி நேரமாக நடுரோட்டில் வைத்து அவருடைய மகன் கதறி அழுதார்.
3. நாகர்கோவிலில் பள்ளி மாணவர்கள் மோதல்; ஒருவருக்கு கத்திக்குத்து
நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த மோதலில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
4. வாய்க்காலில் பஸ் கவிழ்ந்து குழந்தை உள்பட 22 பேர் படுகாயம்
கூத்தாநல்லூர் அருகே வாய்க்காலில் பஸ் கவிழ்ந்து குழந்தை உள்பட 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. ஓமலூர் அருகே போலீசார் வாகன சோதனை: மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் படுகாயம்
ஓமலூர் அருகே போலீசார் வாகன சோதனையின்போது மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை