மாவட்ட செய்திகள்

தேர்தலை நிறுத்த அ.தி.மு.க. முயற்சிக்கவில்லை கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி + "||" + The AIADMK MR Vijayabaskar interviewed in Karur

தேர்தலை நிறுத்த அ.தி.மு.க. முயற்சிக்கவில்லை கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

தேர்தலை நிறுத்த அ.தி.மு.க. முயற்சிக்கவில்லை கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி
தேர்தலை நிறுத்த அ.தி.மு.க. முயற்சிக்கவில்லை என்று கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர்,

கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே கோவை ரோட்டில் உள்ள அ.தி.மு.க. பணிமனை முன்பாக மாற்று கட்சியினர் சிலர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். பின்னர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-


நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகே, அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளர் பற்றி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் முடிவு செய்வர். பிரசார அனுமதி விவகாரத்துக்கு டெல்லியில் இருந்து வந்த தேர்தல் பார்வையாளரே முழு காரணம். எங்களுக்கு கடந்த 12-ந்தேதியே பிரசார அனுமதியை கொடுத்து விட்டனர். அதன்படி மதியம் 2 மணியிலிருந்து மாலை 6 மணிக்கு இறுதிக்கட்ட பிரசாரத்தை மனோகரா கார்னரில் முடிப்பதாக கூறியதற்கு, தேர்தல் அதிகாரி கையெழுத்திட்டு கொடுத்து விட்டனர். அதன் பிறகு எதிர்க்கட்சி (தி.மு.க.-காங்கிரஸ்) கேட்கிறார்கள் என்றால், எங்களிடையேயும் அதிகாரி கேட்டிருக்க வேண்டும். அவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்தது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

இதை தான் கலெக்டரிடம் கூறி, எங்களுக்கு கொடுத்த நேரப்படி நாங்கள் வருகிறோம் என்றோம். ஆனால் அவர், ஆன்லைன் விண்ணப்பத்தில் நேரம் சரிவர குறிப்பிடவில்லை என்றார். அதற்கு சர்வர் கோளாறு காரணமாக அது போல் ஆகிவிட்டது என்றேன். அது எங்களது தவறு அல்ல. 6 தடவை அப்லோடு செய்தும் அது ஏறவில்லை. தேர்தல் பார்வையாளர் எங்களை கூப்பிட்டு நேரம் ஒதுக்கி இருந்தால் இவ்வளவு பிரச்சினை நடந்திருக்காது.

இறுதி பிரசார பயணத்தை அனைவருமே டவுனில் தான் முடிக்க எண்ணுவர். அதை தப்பு என்று சொல்லவில்லை. எனினும் இறுதி கட்ட பிரசாரத்தில் சரிவர திட்டமிடாமல் எங்களை வழிமறித்து கல்வீசி தாக்கினார்கள். யார் முதலில் எறிந்தார்கள் என்பதை பார்க்க வேண்டும். எங்களது வார்டு செயலாளர், காலில் காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கிறார். தி.மு.க. தான் அராஜகம் செய்தது. 10 ஆயிரம் பேர் இருக்கிற இடத்தில், எங்களது காரை அடித்தால் நாங்கள் பார்த்து கொண்டு இருப்போமா?. அ.தி.மு.க. என்றுமே அராஜகத்துக்கு துணை போகாது. ஜெயலலிதா வழியில் எங்களது முதல்-அமைச்சரும் அதை தான் சொல்லியிருக்கிறார். நாங்கள் ஜெயிக்கப்போவது உறுதி. அப்படி இருக்கையில் நாங்கள் (அ.தி.மு.க.) தேர்தலை நிறுத்த முயற்சிக்கவில்லை. தேர்தல் நின்றால் மறுபடியும் யார் ஒரு மாதத்திற்கு பிரசாரம் செய்வது. இதை பொறுத்து கொள்ள முடியாமல் தான் கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கூட்டணி தர்மத்துக்காக அமைதியாக இருக்கிறேன்: அமைச்சர் ஜெயக்குமாரின் நற்சான்று எனக்கு தேவை இல்லை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
அமைச்சர் ஜெயக்குமாரின் நற்சான்று எனக்கு தேவை இல்லை, கூட்டணி தர்மத்துக்காக அமைதியாக இருப்பதாக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
2. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார்
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார்.
3. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற முடியாது அமைச்சர் காமராஜ் பேட்டி
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற முடியாது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
4. நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம் என அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
5. கிராம ஊராட்சி தலைவர்கள் கட்சி பாகுபாடு இன்றி மக்களின் தேவைகளை நிறைவேற்றவேண்டும் அமைச்சர் பேச்சு
கிராம ஊராட்சி தலைவர்கள் கட்சி பாகுபாடு இன்றி மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசினார்.