மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி பகுதியில் ஓட்டுப்பதிவுக்கு வாக்குச்சாவடிகள் தயார் + "||" + Kovilpatti area To vote Polling booths Ready

கோவில்பட்டி பகுதியில் ஓட்டுப்பதிவுக்கு வாக்குச்சாவடிகள் தயார்

கோவில்பட்டி பகுதியில் ஓட்டுப்பதிவுக்கு வாக்குச்சாவடிகள் தயார்
கோவில்பட்டி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகள் ஓட்டுப்பதிவுக்கு தயார் நிலையில் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் நேற்று மாலையில் இருந்து அதிகாரிகள், ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.
கோவில்பட்டி,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவுக்காக, கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடி அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் தலா ஒரு அலுவலர், 3 உதவியாளர்கள் வீதம் அனுப்பப்பட்டனர். மேலும் ஓட்டுப்பதிவுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரம், ஒப்புகை சீட்டு சரிபார்க்கும் எந்திரம், எழுதுபொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் மினி லாரிகளில் ஏற்றிச் சென்றனர்.

நேற்று மாலையில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான ஓட்டுப்பதிவு எந்திரங்கள், பொருட்கள் சென்றடைந்தன. அந்த வாக்குச்சாவடிகள் ஓட்டுப்பதிவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள் ளன. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த பணிகளை தேர்தல் பார்வையாளர் சுக்கி ஷியாம் பெய்க், கோவில்பட்டி உதவி கலெக்டர் அமுதா, தாசில்தார் பரமசிவன், தேர்தல் துணை தாசில்தார் சரவணபெருமாள் ஆகியோர் பார்வையிட்டனர். வாக்குசாவடி அலுவலர்களுடன் பல்வேறு கல்லூரிகளின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகளும் தேர்தல் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.