பெரம்பலூர் மாவட்டத்தில் 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி


பெரம்பலூர் மாவட்டத்தில் 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
x
தினத்தந்தி 19 April 2019 10:15 PM GMT (Updated: 19 April 2019 6:11 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் 30 பள்ளிகள் பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.

பெரம்பலூர்,

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 30 மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்்சி பெற்றுள்ளன. அதன்விபரம் வருமாறு:-

1. அரசு மேல்நிலைப்பள்ளி, கை.களத்தூர்.

2. அரசு மேல்நிலைப்பள்ளி, ரஞ்சன்குடி.

3. அரசு மேல்நிலைப்பள்ளி, கவுல்பாளையம்.

4. அரசு மேல்நிலைப்பள்ளி, கூத்தூர்.

5. அரசு மேல்நிலைப்பள்ளி, ஒகளுர்.

6. அரசு மேல்நிலைப்பள்ளி, பேரளி.

7. மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி, கிழுமத்தூர்.

8. நேரு மேல்நிலைப்பள்ளி, எறையூர்.

9. புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்.

சுயநிதி பள்ளிகள்

10. மவுலானா மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்.

11. எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, அம்மாபாளையம்.

12. ஸ்ரீராகவேந்திரா மேல் நிலைப்பள்ளி, அரும்பாவூர்.

13. ஸ்ரீசாரதாதேவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெரம்பலூர்.

14. தந்தை ரோவர் மேல் நிலைப்பள்ளி, நெற்குணம்.

15. அன்னை மேல்நிலைப்பள்ளி, பாடாலூர்.

16. ராஜவிக்னேஷ் மேல் நிலைப்பள்ளி, மேல மாத்தூர்.

17. வான்புகழ் வள்ளுவர் மேல்நிலைப்பள்ளி, ஒதியம்.

மெட்ரிக் பள்ளிகள்

18. ஆருத்ரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்.

19. தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்.

20. கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்.

21. லெப்பைக்குடிகாடு விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அயன்பேரையூர்.

22. சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரும்பாவூர்.

23. ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்.

24. செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எளம்பலூர்.

25. சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரும்பாவூர்.

26. ஹயக்கிரீவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நக்க சேலம்.

27. லிட்டில் பிளவர் மேல் நிலைப்பள்ளி, செட்டிகுளம்.

28. சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வரிசைப்பட்டி.

29. ஸ்ரீஅம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாடாலூர்.

30. செயிண்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருமாந்துறை.

இவ்வாறு அதில் கூறப்பட் டிருந்தது.

கடந்த ஆண்டு பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் மாநில அளவிலான தேர்ச்சி தரவரிசை பட்டியலில் பெரம்பலூர் மாவட்டம் 12-வது இடத்தை பிடித்திருந்தது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 94.10 ஆகும். கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு 1.5 சதவீதம் அதிகரித்து இந்த ஆண்டு 95.15 சதவீதம் பெற்றுள்ளது. இதனால் தற்போது மாநில அளவில் 9 இடம் முன்னேறி பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. 12-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியதற்காக மாணவர்களையும் அரும்பணியாற்றிய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியையும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளையும், பள்ளி ஆசிரியர்களையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருவதோடு மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் கூறி பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 4 அரசு பள்ளிகளும், 1 அரசு உதவி பெறும் பள்ளியும், 7 சுயநிதி பள்ளிகளும், 12 மெட்ரிக் பள்ளிகளும் என மொத்தம் 24 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தன. ஆனால் இந்த ஆண்டு 6 பள்ளிகள் அதிகரித்து மொத்தம் 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் மாவட்டத்தில் வேதியியல், கணக்கு பதிவியியல், உயிரியியல் ஆகிய பாடங்களில் தலா 2 பேர், கணக்கு பதிவியியல் மற்றும் தணிக்கையியலில் 10 பேர், கணினி அறிவியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் தலா ஒருவரும் என மொத்தம் 18 மாணவ-மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி வேதியியல் பாடத்தில் ஒரு மாணவியும், கணக்கு பதிவியியல் பாடத்தில் ஒரு மாணவரும் 100-க்கு, 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். ஆனால் கணிதம், வணிகவியல் ஆகிய பாடங்களில் யாரும் 100-க்கு, 100 மதிப்பெண்களை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் அந்த பாடங்களுக்கான வினாத்தாள் கடினமாக கேட்கப்பட்டிருந்ததால் மாணவர்களால் முழு மதிப்பெண்களை பெறமுடியவில்லை என்று அந்த பாடங்களுக்கான ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்காக நடத்தப்பட்ட சூப்பர்-30 என்ற சிறப்பு வகுப்பில் பயின்ற 67 மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 10 பேர் 500-க்கு மேல் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளில் கண்பார்வை குறைபாடுடையவர்கள் 4 பேரும், உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் 9 பேரும் தேர்வு எழுதினர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் 2 பேர் தேர்வு எழுதியதில், ஒருவர் தேர்ச்சி பெற்றார். இதர வகை மாற்றத்திறனாளிகள் 12 பேரில் 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Next Story