கூடுவாஞ்சேரியில் வாலிபரை தாக்கி 4 பவுன் நகை பறிப்பு


கூடுவாஞ்சேரியில் வாலிபரை தாக்கி 4 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 22 April 2019 3:15 AM IST (Updated: 22 April 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரியில் வாலிபரை தாக்கி 4 பவுன் நகை பறித்து சென்றனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள ராணி அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 27). இவர் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் விஜயை வழிமறித்து தாக்கியது. பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த தங்கச்சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 4 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து விஜய் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Next Story