இருளிலும் பார்க்க முடியும்


இருளிலும் பார்க்க முடியும்
x
தினத்தந்தி 24 April 2019 7:43 AM GMT (Updated: 24 April 2019 7:43 AM GMT)

இரவில் எழுந்து சென்று சுவிட்சை தேடவேண்டியதில்லை

அடர்த்தியான இருளிலும் பார்க்கக்கூடிய ஒரு வகையான சென்சார் திரைகளை உருவாக்கி உள்ளனர் இஸ்ரேல் நாட்டின் பென் குரியன் பல்கலைக்கழகத்தினர். இந்த சென்சார்களை பயன்படுத்தி மெலிதான கண்ணாடிகளின் மூலம் இருட்டான அறைகளிலும் பார்க்க முடியும்.

இதனை அணிந்து கொண்டால், இரவில் எழுந்து சென்று சுவிட்சை தேடவேண்டியதில்லை. அகச்சிவப்பு கதிர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன இந்த சென்சார்கள். 1500 நானோ மீட்டர் வரையுள்ள அகச்சிவப்பு கதிர்கள் இருளுக்குள் ஊடுருவி மனிதர்கள் பார்க்கும் வகையில் உருவங்களாக காட்டுகின்றன.

இந்த சென்சார் திரைகளை கேமரா லென்சிலும் பொருத்திக் கொள்ளலாம். தானியங்கி கார்களுக்கு இந்த திரைகளை பொருத்துவதன் மூலம் இருளிலும், பனி மூட்டத்திலும் அவை விபத்தின்றி இயங்கும் என்று கூறுகின்றனர்.


Next Story