மணல் மாட்டு வண்டி சக்கரத்தில் சிக்கி பெண் பலி பள்ளத்தில் இறங்காமல் இருக்க தடுப்புக்கட்டை வைத்த போது பரிதாபம்


மணல் மாட்டு வண்டி சக்கரத்தில் சிக்கி பெண் பலி பள்ளத்தில் இறங்காமல் இருக்க தடுப்புக்கட்டை வைத்த போது பரிதாபம்
x
தினத்தந்தி 25 April 2019 10:15 PM GMT (Updated: 25 April 2019 7:57 PM GMT)

மணல் மாட்டு வண்டி சக்கரத்தில் சிக்கி பெண் பலி பள்ளத்தில் இறங்காமல் இருக்க தடுப்புக்கட்டை வைத்த போது பரிதாபம்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் மாயவேல் (வயது 50). இவர் வீடு கட்டுவதற்காக தனது ஊரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது டயர் மாட்டு வண்டியில் மணல் எடுத்து வந்து நேற்று காலை தற்போது வசிக்கும் வீட்டிற்கு பின்புறம் இறக்க முயன்றார். அப்போது மாட்டு வண்டி பள்ளத்தில் இறங்காமல் இருப்பதற்காக மாயவேல், தனது மனைவி தமிழரசியை அழைத்து டயர் மாட்டு வண்டி சக்கரத்தில் கட்டையை எடுத்து வைக்குமாறு கூறியுள்ளார். அப்போது தமிழரசி கட்டையை எடுத்து வந்து வண்டிச்சக்கரத்தில் வைக்க முயன்றார். அப்போது வண்டி சக்கரம் எதிர்பாராதவிதமாக கீழே இறங்கியது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த தமிழரசி மீது வண்டி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தமிழரசி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தமிழரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஜெயங்கொண்டம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story