திருவள்ளூர் அருகே மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு


திருவள்ளூர் அருகே மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
x
தினத்தந்தி 28 April 2019 3:45 AM IST (Updated: 28 April 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த அரண்வாயல்குப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் வேலு (வயது 22). பொக்லைன் எந்திர ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி குடிபோதையில் வீட்டுக்கு வந்த வேலு கட்டுமானப்பணிகள் முடிவடையாதநிலையில் உள்ள தனது வீட்டின் மாடியில் படுக்க சென்றார்.

மாடி படிக்கட்டில் இறங்கும் போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story