கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி


கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி
x
தினத்தந்தி 29 April 2019 3:45 AM IST (Updated: 28 April 2019 11:01 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு அடுத்த பழைய சீவரம் அருகே நேற்று காலை அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக தனது நண்பர்களுடன் அவர் சென்றார்.

செங்கல்பட்டு,

சென்னை எழும்பூர் அடுத்த சேத்துப்பட்டு வெங்கடாஜலபதி தெருவை சேர்ந்தவர் முனி. இவரது மகன் நவின் (வயது 17). அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்தநிலையில் தனது நண்பர்கள் இருவருடன், செங்கல்பட்டு அடுத்த பழைய சீவரம் அருகே தோண்டாகுப்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு நவின் வந்திருந்தார்.

நேற்று காலை அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக தனது நண்பர்களுடன் அவர் சென்றார். அங்கு கிணற்றின் அருகே நண்பர்களை நிற்க வைத்துவிட்டு, நவின் மட்டும் கிணற்றில் இறங்கி குளித்தார். ஆனால் நீச்சல் தெரியாததால் நவின் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story