நாடாளுமன்ற தேர்தலின் போது எதிராக கருத்து பத்திரிகையாளர்களை கடிந்துகொண்ட முதல்-மந்திரி குமாரசாமி இனி ஊடகங்களை புறக்கணிப்பேன் என கடும் கோபம்


நாடாளுமன்ற தேர்தலின் போது எதிராக கருத்து பத்திரிகையாளர்களை கடிந்துகொண்ட முதல்-மந்திரி குமாரசாமி இனி ஊடகங்களை புறக்கணிப்பேன் என கடும் கோபம்
x
தினத்தந்தி 28 April 2019 11:15 PM GMT (Updated: 28 April 2019 10:02 PM GMT)

நாடாளுமன்ற ேதர்தலின் போது எதிராக கருத்து வெளியிட்டதால், பத்திரிகையாளர்களை கடிந்துகொண்ட முதல்-மந்திரி குமாரசாமி, இனி ஊடகங்களை புறக்கணிப்பேன் என கடும் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் பெங்களூரு வந்தார். குந்துகோல், சிஞ்சோலி ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் குறித்து அவர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் கே.சி.வேணுகோபாலை முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் சட்டசபை இடைத்ேதர்தல் குறித்து விவாதித்தனர்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலில் சாதக-பாதகங்கள் குறித்தும், எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரையை தோற்கடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர்.

அப்போது, “எங்கள் கட்சியினர் 3 முதல் 4 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள். எனது மகனும் வெற்றி பெறுவார். ஆனால் வாக்குகள் வித்தியாசம் குறைவாக இருக்கும். உங்களின் (காங்கிரஸ்) நிர்வாகிகளின் ஆதரவு முழுமையாக இருந்திருந்தால் நிகிலின் வெற்றி சுலபமாக இருந்திருக்கும். வாக்குகள் வித்தியாசமும் அதிகமாக இருந்திருக்கும்.

ஆனால் காங்கிரசார் சிலர் எதிராக தேர்தலில் பணியாற்றியுள்ளனர்” என்று குமாரசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த நேரத்தில் சிஞ்சோலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுபாஷ் ராத்தோட்டுக்கு கே.சி.வேணுகோபால் ‘பி பாரம்’ வழங்கினார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு குமாரசாமி அங்கிருந்து தனது காருக்கு வந்தார். அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள், குமாரசாமியிடம் பேட்டி காண முயற்சி செய்தனர்.

பத்திரிகையாளர்களை பார்த்ததும், முதல்-மந்திரி குமாரசாமி, “நான் உங்களின் தொலைக்காட்சிகளில்(ஊடகங்கள்) நடைபெறும் விவாதங்களை பார்த்துள்ளேன். இனி ஊடகங்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன். நீங்கள் என்ன விவாதம் வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளுங்கள்” என்று கடும் கோபத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மண்டியா நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நிகில் குமாரசாமி மற்றும் முதல்-மந்திரி குமாரசாமிக்கு எதிராக ஊடகங்களில் செய்து வெளியிட்டதாகவும், இதனால் தான் குமாரசாமி பத்திரிகையாளர்களை கடிந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

Next Story