பள்ளிப்பட்டு பேரூராட்சியில் குரங்குகள் தொல்லை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


பள்ளிப்பட்டு பேரூராட்சியில் குரங்குகள் தொல்லை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 3 May 2019 3:45 AM IST (Updated: 2 May 2019 10:34 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு பேரூராட்சியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. 30-க்கும் மேற்பட்ட குரங்குகள் இங்கு வந்து பொதுமக்களுக்கு தொல்லைகொடுக்கின்றன.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் புதுப்பட்டு, முனிரெட்டிகண்டிகை, ஈச்சம்பாடி போன்ற கிராமங்களும் அடங்கியுள்ளன. பள்ளிப்பட்டு பேரூராட்சியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. 30-க்கும் மேற்பட்ட குரங்குகள் இங்கு வந்து பொதுமக்களுக்கு தொல்லைகொடுக்கின்றன. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலருக்கு புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலரிடம் கேட்டபோது:-

குரங்குகளை பிடிக்க வனத்துறையின் அனுமதி வேண்டும் என்றார். பள்ளிப்பட்டு வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, பேரூராட்சி அதிகாரிகள் உரிய முறையில் தங்களை அணுகினால் தகுந்த உதவிகளை செய்வதாக தெரிவித்தனர். எனவே பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story