பராமரிப்பு பணிகள் காரணமாக மாவட்ட பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
பராமரிப்பு பணிகள் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
கீரமங்கலம்,
கீரமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் செய்யப்படும் கீரமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், சேந்தன்குடி, வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை, எல்.என்.புரம், பனங்குளம், நகரம், செரியலூர் இனாம், செரியலூர் ஜெமின் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை கீரமங்கலம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதேபோல் அன்னவாசல் மற்றும் அண்ணா பண்ணை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளையொட்டி, இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் அன்னவாசல், சித்தன்னவாசல், செங்கப்பட்டி, சத்திரம், காலாடிப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, வயலோகம், தச்சம்பட்டி, குடுமியான்மலை, பரம்பூர், கீழக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை இலுப்பூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அக்னிமுத்து தெரிவித்துள்ளார்.
மேலும் நாகுடி, கோட்டைப்பட்டினம், ஆவுடையார்கோவில், அமரடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. இதனால் இங்கிருந்து மின்வினியோகம் செய்யப்படும் அரசர்குளம், நாகுடி, கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஆவுடையார்கோவில், மீமிசல், கரூர், பொன்பேத்தி, திருப்புனவாசல், அமரடக்கி அம்பலவானேந்தல், கரகத்திக்கோட்டை, ஜெகதாப்பட்டினம், மீமிசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் வினியோகம் இருக்காது என்று அறந்தாங்கி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் லூர்து சகாயராஜ் தெரிவித்துள்ளார்.
திருமயம், அரிமளம், தல்லாம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருமயம், மணவாளன்கரை, இளஞ்சாவூர், ராமச்சந்திரபுரம், கண்ணங்காரக்குடி, ஊனையூர், சவேரியார்புரம், குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, கோனாபட்டு, கே.பள்ளிவாசல், பி.அழகாபுரி, நல்லூர், துலையானூர், தேத்தாம்பட்டி, வாரியப்பட்டி, கொல்லக்காட்டுப்பட்டி, ராங்கியம், கண்ணனூர், மேலூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி, வீ.லெட்சுமிபுரம், விராச்சிலை, அரிமளம், காமாட்சிபுரம், மிரட்டுநிலை, தாஞ்சூர், பொந்துப்புளி, ஓணாங்குடி, சிராயம்பட்டி, சத்திரம், கோவில்வாசல், கொத்தமங்களம், மேல்நிலைப்பட்டி, வடகாட்டுப்பட்டி, தேனிப்பட்டி, வம்பரம்பட்டி, வாளரமாணிக்கம், கரையப்பட்டி, கீரணிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று திரு மயம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ராம நாதன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் காரையூர் அருகே உள்ள மேலத்தானியம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்படும் காரையூர், கீழத்தானியம், ஒலியமங்கலம், முள்ளிப்பட்டி, சடையம்பட்டி, மறவாமதுரை, கொன்னையம்பட்டி, அரசமலை, நல்லூர், எம்.உசிலம்பட்டி, சூரப்பட்டி, மேலத்தானியம் ஆகிய பகுதிக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 6 வரை மின் வினியோகம் இருக்காது.
கொன்னையூர் துணை மின்நிலைய பகுதியில் பொன்னமராவதி, வலையபட்டி, கொப்பனாப்பட்டி, செம்பூதி, கொன்னைப்பட்டி, சுந்தரம், கோவணூர், செவலூர், மேலமேலநிலை, வேகுப்பட்டி, குழிபிறை, ஏனாதி, பிடாரம்பட்டி, வேந்தன்பட்டி, தொட்டியம்பட்டி, ஆலவயல், கண்டியாநத்தம், கல்லம்பட்டி, நகரப்பட்டி, அம்மன்குறிச்சி, தூத்தூர், மைலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் வினியோகம் இருக்காது என பொன்னமராவதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெயபால் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story