தேர்தல் முடிவு வெளியானதும் மத்தியில் மாற்று அரசு அமையும் சரத்பவார் நம்பிக்கை


தேர்தல் முடிவு வெளியானதும் மத்தியில் மாற்று அரசு அமையும் சரத்பவார் நம்பிக்கை
x
தினத்தந்தி 5 May 2019 4:30 AM IST (Updated: 5 May 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் முடிவு வெளியானதும் மத்தியில் மாற்று அரசு அமையும் என சரத்பவார் நம்பிக்கை தெரிவித்தார்.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வரும் 23-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தேர்தல் முடிவு வெளியாவதை தொடர்ந்து மத்தியில் மாற்று அரசு அமையும். முடிவு வெளியான அடுத்த நாளே மாற்று அரசு அமையுமா அல்லது அதற்கு 2 வாரங்கள் பிடிக்குமா என்பதை என்னால் கூற முடியாது. காரணம் அது குடியரசு தலைவர் எந்த கட்சியை ஆட்சியமைக்க அழைக்கிறார் என்பதை பொறுத்து உள்ளது. ஆனால் அவர் யாரை அழைத்தாலும் அவர்கள் நாடாளுமன்றத்தில் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய நிலை ஏற்படும்.

தேர்தல் முடிவு வெளியானதும் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஆட்சி அமைப்பது குறித்து பேசி முடிவெடுப்போம். மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியாக தேர்தலை சந்தித்தது. ஆனால் நாங்கள் தேசிய அளவில் கூட்டணி அமைப்பதை தவிர்த்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்ந்து தாக்கி பேசுவது குறித்து கருத்து தெரிவித்த சரத்பவார், “ பிரதமர் பொறுப்புணர்ச்சியுடன் பேசவேண்டும். நான் என் வாழ்க்கையில் 14 தேர்தல்களில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளேன்.” என்றார்.

Next Story