ஊத்துக்கோட்டையில் லாரி மீது ஆட்டோ மோதல்; 4 பேர் படுகாயம்


ஊத்துக்கோட்டையில் லாரி மீது ஆட்டோ மோதல்; 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 4 May 2019 10:00 PM GMT (Updated: 4 May 2019 8:39 PM GMT)

ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள அண்ணா நகரில் சாலை ஓரமாக லாரியை நிறுத்திய பச்சையப்பன் டீ குடிக்க சென்றார்.

ஊத்துக்கோட்டை,

ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்டு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை நோக்கி வந்தது. இந்த லாரியை திருவாரூர் மாவட்டம் தப்பளாம்புலியூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் பச்சையப்பன் (வயது 24) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று மாலை ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள அண்ணா நகரில் சாலை ஓரமாக லாரியை நிறுத்திய பச்சையப்பன் டீ குடிக்க சென்றார்.

அப்போது ஆந்திராவில் உள்ள சுருட்பள்ளியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நின்றிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் படுகாயம் அடைந்தவர்கள் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (42), ஜெ.ஜெ.நகரை சேர்ந்த திருநங்கைகள் அம்மு (21), பவானி (25) மற்றும் ஊத்துக்கோட்டை ரெட்டித் தெருவை சேர்ந்த பிரவீன் (17) என்பது தெரிய வந்தது. விபத்து காரணமாக ஊத்துக்கோட்டை- திருப்பதி இடையே அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story