கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் சாந்த சற்குண காளியம்மன் கோவில் திருவிழா பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் சாந்த சற்குண காளியம்மன் கோவில் திருவிழா பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 12 May 2019 10:15 PM GMT (Updated: 12 May 2019 9:28 PM GMT)

கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் பகுதியில் உள்ள சாந்த சற்குண காளியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் பகுதியில் சாந்த சற்குண காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 6–ந் தேதி பந்தக்கால் முகூர்த்தம் மற்றும் காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பால்குட ஊர்வலம் நடந்தது.

கும்பகோணம் அரசலாற்றங்கரையில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம் பல்வேறு வீதிகள் வழியாக கோவிலில் நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து சாந்த சற்குண காளியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.


ஊர்வலத்தை தொடர்ந்து காளியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (திங்கட்கிழமை) பச்சைக்காளி, பவளக்காளி புறப்பாடு நடைபெற உள்ளது.

நாளை (செவ்வாய்க்கிழமை) காளி திருநடன வீதியுலாவும், 17–ந் தேதி கஞ்சி வார்த்தல், விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சாந்த சற்குண காளியம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் அண்ணலக்ரஹாரம் பகுதி பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

Next Story