மாவட்ட செய்திகள்

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 10 அடியாகு குறைந்தது குட்டைபோல் காட்சி தருகிறது + "||" + Anthiyur Vattipalampam dam water level reduced to 10 feet

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 10 அடியாகு குறைந்தது குட்டைபோல் காட்சி தருகிறது

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 10 அடியாகு குறைந்தது குட்டைபோல் காட்சி தருகிறது
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 10 அடியாக குறைந்து குட்டைபோல் காட்சி தருகிறது.

அந்தியூர்,

அந்தியூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. மேற்கு மலைப்பகுதி மற்றும் தாளக்கரை, தாமரைகரை பகுதியில் மழை பெய்யும்போது இந்த அணைக்கு தண்ணீர் வரும்.

இது தவிர வரட்டுப்பள்ளம். கள்ளுப்பள்ளம், கும்பரவாணி பள்ளம் ஆகிய வற்றின் மூலமும் அணைக்கு தண்ணீர் வருகிறது. 33.33 அடி உயரம் கொண்ட இந்த அணை ஆண்டு தோறும் நவம்பர் மாதத்தில் நிரம்பும்.

அணை நிரம்பும்பொழுது அதில் இருந்து வெளியேறும் உபரிநீர் அந்தியூர் பெரிய ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி, சந்தியபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி ஆப்பக்கூடல் ஏரிகளுக்கு சென்று சேரும். இவ்வாறு சேரும் தண்ணீர் மூலம் சுமர் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்தநிலையில் முறையாக மழை பெய்யாததால் கடந்த 2 ஆண்டுகளாக அணை நிரம்பவில்லை. அதனால் 33.33 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம் தற்போது 10 அடியாக குறைந்துள்ளது.

அந்தியூர் வனப்பகுதியில் உள்ள யானைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் மாலை நேரங்களில் வரட்டுப்பள்ளம் அணைக்கு வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்லும்.

தற்போது நீர்மட்டம் மிகவும் குறைந்துவிட்டதால் வனவிலங்குகள் தண்ணீரை அருகே உள்ள கிராமங்களுக்கு படையெடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு செல்லும்போது யானைகள் விவசாய பயிர்களை நாசம் செய்யும். அதனால் மழை பெய்யாதா? வரட்டுப்பள்ளம் அணை மீண்டும் நிரம்பாதா? என்ற அந்த பகுதி விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளார்கள்.


அதிகம் வாசிக்கப்பட்டவை