மினி ஜான் கூப்பர்ஸ் வொர்க்ஸ் அறிமுகம்


மினி ஜான் கூப்பர்ஸ் வொர்க்ஸ் அறிமுகம்
x
தினத்தந்தி 15 May 2019 12:37 PM IST (Updated: 15 May 2019 12:37 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் உதிரி பாகமாக இறக்குமதி செய்யப்பட்டு இங்கு அசெம்பிள் செய்யப்பட்டுள்ளது. இதனால் கூப்பர் எஸ் மாடலை விட இதன் விலை ரூ.9.2 லட்சம் அதிகமாகும். கூப்பர் எஸ் மாடல் விலை ரூ.34.20 லட்சமாகும்.

மூன்று கதவுகளைக் கொண்ட ஹாட்ச் பேக் மாடலாக வந்துள்ள இந்த கார் 231 ஹெச்.பி. திறனும், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையும் கொண்டது. 2 லிட்டர், நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. இதில் 8 ஸ்பீடுகியர் பாக்ஸ்கள் உள்ளன. கூப்பர் எஸ் மாடலில் 7 கியர்கள் மட்டுமே உள்ளன. 10 அழகிய நிறங்களில் இது வந்துள்ளது.

நான்கு வித்தியாசமான வண்ணக் கலவைகளைக் கொண்டதாக இது உள்ளது. மேற்கூரை மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் ஒரு நிறத்தில் உள்ளது. இதற்கு 17 அங்குல அலாய் சக்கரங்கள் உள்ளன. மேட்ரிக்ஸ் எல்.இ.டி. விளக்கு, மேற்கூரை ஆகிய வசதிகளும் இதில் உள்ளன. தேவைப்பட்டால் 18 அங்குலம் கொண்ட சக்கரங்களையும் தேர்வு செய்யலாம்.

இதன் உள்பகுதி மிகச் சிறப்பாக உள்ளது. முன்பகுதி மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார் உள்ளது. அத்துடன் ரிவர்ஸ் கேமராவும் இதில் உள்ளது. அடாப்டிவ் சஸ்பென்ஷன் இருப்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் ஆப்பிள் கார் பிளே, நேவிகேசன் வசதியும் உள்ளது. சாகச பிரியர்களுக்கு ஏற்ற கார் இது.


Next Story