13 பேரை கடித்து குதறிய வெறி நாய் : பொதுமக்கள் அடித்து கொன்றனர்
கலசபாக்கம் அருகே 13 பேரை கடித்து குதறிய வெறி நாயை பொதுமக்கள் அடித்து கொன்றனர்.
கலசபாக்கம்,
கலசபாக்கம் ஊராட்சி விண்ணுவாம்பட்டு, சத்தியமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் ஒரு வெறிநாய் சுற்றித்திரிந்தது. அந்த வெறிநாய் தெருவில் நடந்து சென்ற 6 பேரை விரட்டி கடித்தது. இதனால் அந்த நாயை பொதுமக்கள் விரட்டினர். பின்னர் அங்கிருந்து அந்த நாய் பில்லூர் கிராமத்துக்கு சென்றது. அங்கிருந்த 3 பேரையும், பூண்டி கிராமத்தில் 4 பேரையும், ஒரு பசு மாட்டையும் கடித்து குதறியது.
தகவல் அறிந்த சுகாதார துறையினர் விரைந்து சென்று வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதற்கிடையில் ஆத்திரமடைந்த பூண்டி கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அந்த வெறி நாயை பிடித்து அடித்து கொன்றனர். பின்னர் அந்த நாயை ஏரியில் குழியில் தோண்டி புதைத்தனர்.
Related Tags :
Next Story