குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான, புரோக்கர்கள் 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி - நாமக்கல் கோர்ட்டு உத்தரவு


குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான, புரோக்கர்கள் 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி - நாமக்கல் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 May 2019 10:00 PM GMT (Updated: 15 May 2019 11:17 PM GMT)

ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான புரோக்கர்கள் 3 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து, நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் புரோக்கர்கள் லீலா, செல்வி மற்றும் அருள்சாமி ஆகிய 3 பேரையும் ஜாமீனில் விடுவிக்கக்கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் தனசேகரனும், புரோக்கர்கள் தரப்பில் வக்கீல் நல்லசிவனும் வாதாடினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இளவழகன் புரோக்கர்கள் 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story