மாவட்ட செய்திகள்

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் + "||" + Roadside occupations  Sequestration

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
காஞ்சிக்கோவில் அருகே சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பெருந்துறை, 

காஞ்சிக்கோவில் அருகே கரங்கரடு என்ற இடத்தில் அபாயகரமான வளைவு உள்ளது. இந்த வளைவில் ரோட்டை ஆக்கிரமித்தப்படி பாறைகள் மற்றும் வீட்டின் சுவர் இருந்தன. 

இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெற்றது. இதன்காரணமான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நேற்று அங்கு வந்தனர். 

பின்னர் கரங்கரடியில் உள்ள வளைவில் சாலையோரத்தில் இருந்து பாறைகள் மற்றும் வீட்டின் சுவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. 

இதனால் அந்த ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மயான வசதி கேட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
மயானத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதை தொடர்ந்து மயான வசதி கேட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. பேச்சிப்பாறை சீரோ பாயிண்ட் பகுதியில் 48 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
பேச்சிப்பாறை சீரோ பாயிண்ட் பகுதியில் 48 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
3. உக்கடம் வாலாங்குளக்கரையில், ஆக்கிரமித்து கட்டப்பட்ட 552 வீடுகள் இடித்து அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
கோவை உக்கடம் பகுதியில் வாலாங்குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 552 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.
4. கீழக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கீழக்கரையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
5. ஆக்கிரமிப்பில் உள்ள 600 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை
பொன்னேரி பகுதியில் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள 600 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அதிகம் வாசிக்கப்பட்டவை