மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு முகாம்


மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 16 May 2019 10:45 PM GMT (Updated: 16 May 2019 6:58 PM GMT)

மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனையில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜசேகர் தலைமை தாங்கினார். காளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரத்சந்தர், அரசு மருத்துவமனை டாக்டர் வீரசோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கர் வரவேற்றார்.

முகாமில் டெங்கு கண்காட்சி நடத்தப்பட்டு, அதில் டெங்கு காய்ச்சல் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் எடுத்து கூறப்பட்டது. முகாமில் மருத்துவமனை செவிலிய கண்காணிப்பாளர்கள் உமா, வளர்மதி, ஜமுனா, சித்ரா மற்றும் செவிலியர்கள், ஊட்டச்சத்து பணியாளர்கள், தனியார் நர்சிங் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர். பொதுமக்களிடம் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகம் முழுவதும் டெங்கு தடுப்பு பணியாளர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியை மேற்கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் மலர்கொடி நன்றி கூறினார்.

குத்தாலம்

இதேபோல் குத்தாலம் அருகே கிளியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மருத்துவ அலுவலர் டாக்டர் இந்திரா பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். சித்தா மருத்துவர் ஜோஷிஹெலன் முன்னிலை வகித்தார். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) தவபாலன் கலந்து கொண்டு டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்து கூறினார்.

தொடர்ந்து டெங்கு நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் எடுத்து கூறப்பட்டது. முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் நூருல்ஹக், இளநிலை பூச்சியியல் வல்லுனர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் தர்மலிங்கம், முருகேசன், முரளி, சந்திரசேகர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் சுகாதார ஆய்வாளர் முத்துக்குமாரசாமி நன்றி கூறினார்.

Next Story