அரக்கோணம் - ஜோலார்பேட்டை இடையே மேம்பாட்டு பணிகள்: 26-ந் தேதி வரை விரைவு ரெயில்களின் சேவையில் மாற்றம்


அரக்கோணம் - ஜோலார்பேட்டை இடையே மேம்பாட்டு பணிகள்: 26-ந் தேதி வரை விரைவு ரெயில்களின் சேவையில் மாற்றம்
x
தினத்தந்தி 21 May 2019 10:45 PM GMT (Updated: 21 May 2019 10:45 PM GMT)

அரக்கோணம்- ஜோலார்பேட்டை இடையே தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடப்பதால் விரைவு ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டை,

அரக்கோணம்- ஜோலார்பேட்டை இடையே தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடப்பதால் வருகிற 26-ந் தேதி வரை விரைவு ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அரக்கோணம் - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் விண்ணமங்கலம் - குடியாத்தம் இடையே தண்டவாளத்தை மேம்படுத்தும் பணிகள் வருகிற 26-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக நேற்று பெங்களூரு - சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் ஏ.சி. டபுள் டெக்கர் விரைவு ரெயில் (22626) மேல்பட்டியில் 80 நிமிடங்களும், ஆலப்புழா - தன்பாத் விரைவு ரெயில் (13352) பச்சகுப்பத்தில் 65 நிமிடங்களும், கே.எஸ்.ஆர். பெங்களூரு - சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் பிருந்தாவன் விரைவு ரெயில் (12640), மைசூரு - சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் சதாப்தி விரைவு ரெயில் (12008) விண்ணமங்கலத்தில் 15 நிமிடங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக சென்றன.

இன்று (புதன்கிழமை) கே.எஸ்.ஆர். பெங்களூரு - சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் ஏ.சி. டபுள்டெக்கர் விரைவு ரெயில் (22626) மேல்பட்டியில் 80 நிமிடங்களும், ஆலப்புழா - தன்பாத் விரைவு ரெயில் (13352) பச்சகுப்பம் ரெயில் நிலையத்தில் 65 நிமிடங்களும், கே.எஸ்.ஆர். பெங்களூரு - சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (12640) ஆம்பூரில் 60 நிமிடங்களும், எர்ணாகுளம் - பிலாஸ்பூர் வாராந்திர ரெயில் (22816) விண்ணமங்கலத்தில் 35 நிமிடங்களும் நின்று செல்லும்.

23-ந் தேதி கே.எஸ்.ஆர். பெங்களூரு - சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் ஏ.சி.டபுள் டெக்கர் விரைவு ரெயில் (22626) வளத்தூரில் 85 நிமிடங்களும், ஆலப்புழா - தன்பாத் ரெயில் (13352) மேல்பட்டியில் 75 நிமிடங்களும், கே.எஸ்.ஆர். பெங்களூரு - சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் பிருந்தாவன் விரைவு ரெயில் (12640), மைசூர் - சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் (12008) ஆகியவை ஆம்பூரில் 20 நிமிடங்களும் நின்று செல்லும்.

24, 25 -ந் தேதிகளில் கே.எஸ்.ஆர். பெங்களூரு - சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் டபுள்டெக்கர் ஏ.சி. விரைவு ரெயில் (22626) வளத்தூரில் 85 நிமிடங்களும், ஆலப்புழா - தன்பாத் விரைவு ரெயில் (13352) மேல்பட்டியில் 75 நிமிடங்களும், கே.எஸ்.ஆர். பெங்களூரு - சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் பிருந்தாவன் விரைவு ரெயில் (12640) பச்சகுப்பத்தில் 60 நிமிடங்களும், மைசூர் - சென்னை சென்டிரல் (12008) சதாப்தி விரைவு ரெயில் ஆம்பூரில் 20 நிமிடங்களும் நின்று செல்லும்.

கே.எஸ்.ஆர். பெங்களூரு - அரக்கோணம் பயணிகள் ரெயில் (56262) ஜோலார்பேட்டை வரை மட்டும் இயக்கப்படும். ரத்து செய்யப்பட்டுள்ள ஒரு பகுதிக்கு பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

மைசூர் - தர்பாங்கபமதி விரைவு ரெயில் (12578) வளத்தூரில் 195 நிமிடங்களும், கே.எஸ்.ஆர். பெங்களூரு - காக்கிநாடா போர்ட் சேஷாத்திரி விரைவு ரெயில் (17209) மேல்பட்டியில் 100 நிமிடங்களும் நின்று செல்லும்.

26-ந் தேதி கே.எஸ்.ஆர். பெங்களூரு - அரக்கோணம் பயணிகள் ரெயில் (56262) ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும். ரத்து செய்யப்பட்டுள்ள ஒரு பகுதிக்கு பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படும். யஷ்வந்த்பூர் - ஹவுரா துரந்தோ விரைவு ரெயில் (12246) வளத்தூரில் 130 நிமிடங்களும், கே.எஸ்.ஆர். பெங்களூரு - காக்கிநாடா போர்ட் சேஷாத்திரி விரைவு ரெயில் (12245) மேல்பட்டியில் 100 நிமிடங்களும், ஹவுரா - யஷ்வந்த்பூர் துரந்தோ விரைவு ரெயில் (12245) காவனூரில் 230 நிமிடங்களும், சென்னை சென்டிரல் - மங்களூரு வெஸ்ட்கோஸ்ட் விரைவு ரெயில் (22637) லத்தேரியில் 130 நிமிடங்களும் நின்று செல்லும். இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டிருந்தது.


Next Story