மோடியின் மந்திரிசபையில் பி.சி.மோகன் உள்பட 7 பேருக்கு மந்திரி பதவி?


மோடியின் மந்திரிசபையில் பி.சி.மோகன் உள்பட 7 பேருக்கு மந்திரி பதவி?
x
தினத்தந்தி 27 May 2019 3:38 AM IST (Updated: 27 May 2019 3:38 AM IST)
t-max-icont-min-icon

மோடியின் மந்திரிசபையில் கர்நாடகத்தை சேர்ந்த 7 பேருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜனதா 25 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. அது மட்டுமின்றி பா.ஜனதா ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரான நடிகை சுமலதாவும் வெற்றி பெற்றிருக்கிறார்.

கர்நாடக வரலாற்றில் பா.ஜனதா முதல் முறையாக மிக அதிகமான இடங்களை பெற்றுள்ளது. இதனால் பா.ஜனதா தலைவர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதன்காரணமாக பா.ஜனதா மேலிட தலைவர்கள், மோடி மந்திரிசபையில் கர்நாடகத்திற்கு அதிக பிரதிநிதித்துவம், அதாவது 7 பேருக்கு மந்திரி பதவி வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது எம்.பி.க்கள் அனந்தகுமார் ஹெக்டே (உத்தர கன்னடா), சீனிவாசபிரசாத் (சாம்ராஜ்நகர்), ஷோபா (உடுப்பி), உமேஷ் ஜாதவ் (கலபுரகி), பி.சி.மோகன் (மத்திய பெங்களூரு), பசவராஜ் (துமகூரு), பிரதாப்சிம்ஹா (மைசூரு) ஆகிய 7 பேருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அனந்தகுமார் ஹெக்டே பிராமண சமூகத்தை சேர்ந்தவர். அதேபோல் சீனிவாச பிரசாத் -தலித், ஷோபா-ஒக்கலிகர், உமேஷ் ஜாதவ்-தலித், பசவராஜ்-லிங்காயத், பிரதாப்சிம்ஹா-ஒக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story