குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - கலெக்டர் நாகராஜன் பேட்டி


குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - கலெக்டர் நாகராஜன் பேட்டி
x
தினத்தந்தி 30 May 2019 9:45 PM GMT (Updated: 31 May 2019 12:14 AM GMT)

மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் நாகராஜன் கூறியுள்ளார்.

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டியில் மாவட்ட கலெக்டர் நாகராஜன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கொட்டாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அங்கு நோயாளிகளுக்கு மருந்துகள் தட்டுப்பாடின்றி வழங்கப்படுகிறதா, முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என கேட்டறிந்தார். மேலும் ஆஸ்பத்திரி பணியாளர்களிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கனிவுடன் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர் கொட்டாம்பட்டி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்ற கலெக்டர், அப்பகுதியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை தொடர்பாகவும், அலுவல் சார்ந்தும் ஆய்வு செய்தார். அப்போது கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் எந்தெந்த ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்று கேட்டு, அந்த பகுதிகளில் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதேபோல் கருங்காலக்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் அவர் ஆய்வு செய்தார்.

முன்னதாக மேலூரில் கலெக்டர் நாகராஜன் நேரில் ஆய்வு நடத்தினார். அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்த அவர், நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், மருந்துகள் இருப்பு குறித்து கேட்டறித்தார். பின்னர் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு செய்தார். மேலூர் நகராட்சி அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் பிரச்சினை தொடர்பாகவும், அலுவல் சார்ந்த ஆய்வு பணியினையும் அவர் மேற்கொண்டார். மேலூர் பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்டு கடந்த ஓராண்டாக மூடப்பட்டு கிடந்த கழிப்பறையை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட அவர் உத்தரவிட்டார்.

இதேபோன்று சோழவந்தானிலும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

பின்னர் ஆய்வு குறித்து கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், “மாவட்டம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை இருப்பதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். போதுமான தண்ணீர் இருக்கும் வேளையில் அதனை பிரித்து வினியோகம் செய்வதில் தவறுகள் நடக்கின்றன. அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட அளவில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க காவிரி கூட்டுக்குடிநீர், வைகை கூட்டுக்குடிநீர் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ளூர் திட்ட குடிநீர் ஆகியவை மூலம் 

Next Story