மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை 2,505 பேர் எழுதினர்


மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை 2,505 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 8 Jun 2019 11:15 PM GMT (Updated: 8 Jun 2019 3:56 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஆசிரியர் தகுதித்தேர்வு முதல்தாளை 2,505 பேர் எழுதினர்.

நாமக்கல், 

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான முதல்தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 7 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வை எழுத 2,909 தேர்வர்கள் விண்ணப்பம் செய்து இருந்தனர். இவர்களில் 404 பேர் தேர்வு எழுத வரவில்லை. மீதமுள்ள 2,505 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். மாற்று திறனாளிகளை பொறுத்த வரையில் 49 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இவர்களில் 38 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். மாற்றுத்திறனாளிகளுக்கு என தரை தளத்தில் தனியாக அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த தேர்வை பள்ளிக் கல்வித்துறையின் இணை இயக்குனர் அனிதா நேரில் சென்று பார்வையிட்டார். இது தவிர தேர்வு பணியில் 900 பேர் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். தேர்வை முன்னிட்டு அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான 2-ம் தாள் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் 31 மையங்களில் 12 ஆயிரத்து 348 பேர் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story