ஏர்வாடியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்


ஏர்வாடியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்
x
தினத்தந்தி 12 Jun 2019 4:00 AM IST (Updated: 11 Jun 2019 6:30 PM IST)
t-max-icont-min-icon

ஏர்வாடியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

ஏர்வாடி, 

ஏர்வாடியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

பொறியியல் பட்டதாரி 

நெல்லை மாவட்டம் ஏர்வாடி எல்.என்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் மகன் அலெக்ஸ் (வயது 23). பொறியியல் பட்டதாரி. பத்தமடையை சேர்ந்தவர் வேல்முருகன் மகள் பார்வதி (23). பிளஸ்–2 முடித்துள்ளார்.

இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பார்வதியின் பெற்றோருக்கு தெரியவந்ததும் மகளை கண்டித்ததுடன் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்து வந்தனர். அதன்படி வருகிற 20–ந் தேதி திருமணம் நடத்த பெற்றோர் மற்றும் மணமகன் வீட்டார் ஏற்பாடு செய்து வந்தனர்.

போலீசில் தஞ்சம் 

இந்தநிலையில் காதல் ஜோடி அலெக்ஸ், பார்வதி ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேறினர். பின்னர் கோவிலில் திருமணம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு ஏர்வாடி வந்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஏர்வாடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

போலீசார் இருதரப்பு பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பார்வதி, தனது காதல் கணவருடன் செல்வதில் உறுதியாக இருந்தார். மேலும் அவர் மேஜர் என்பதால் அவரது விருப்பப்படி காதல் கணவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.


Next Story