வேலூரில் நடந்த ஜமாபந்தியில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைக்கான ஆணை


வேலூரில் நடந்த ஜமாபந்தியில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைக்கான ஆணை
x
தினத்தந்தி 12 Jun 2019 11:00 PM GMT (Updated: 12 Jun 2019 5:35 PM GMT)

வேலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. மனுகொடுத்த உடனேயே 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. முதல் கட்டமாக வேலூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, அணைக்கட்டு, ராணிப்ேபட்டை, ஆற்காடு ஆகிய 6 தாலுகாக்களில் வருகிற 18-ந் தேதிவரை ஜமாபந்தி நடக்கிறது.

வேலூர் தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டர் மெகராஜ் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. முதல்நாளான நேற்று சத்துவாச்சாரி பிர்கா பகுதிக்கு உட்பட்ட வருவாய் கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. இதனை ெதாடர்ந்து பொதுமக்கள் கலந்துகொண்டு மனுகொடுத்தனர்.

மொத்தம் 120 மனுக்கள் பெறப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் பலர் மாதாந்திர உதவித்தொகை உள்பட பல்வேறு உதவிகள் கேட்டு மனுகொடுத்தனர். அந்த மனுக்களை உதவி கலெக்டர் மெகராஜ் பரிசீலனை செய்து 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை உடனடியாக வழங்கினார்.

ஜமாபந்தியில் பயிற்சி கலெக்டர் கில்ஸ்டோனிபுஷ்பராஜ், தாசில்தார் ரமேஷ், சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெகதீன், வட்ட வழங்கல் அலுவலர் நெடுமாறன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராமநிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story