மாவட்ட செய்திகள்

வாசுதேவநல்லூரில் தனியார் ஆலை ஊழியர் வீட்டில் 9 பவுன் நகை மாயம் போலீசார் விசாரணை + "||" + Home in the private plant employee 9 pound jewelry missing

வாசுதேவநல்லூரில் தனியார் ஆலை ஊழியர் வீட்டில் 9 பவுன் நகை மாயம் போலீசார் விசாரணை

வாசுதேவநல்லூரில் தனியார் ஆலை ஊழியர் வீட்டில் 9 பவுன் நகை மாயம் போலீசார் விசாரணை
வாசுதேவநல்லூரில் தனியார் ஆலை ஊழியர் வீட்டில் 9 பவுன் நகைகள் மாயமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசுதேவநல்லூர், 

வாசுதேவநல்லூரில் தனியார் ஆலை ஊழியர் வீட்டில் 9 பவுன் நகைகள் மாயமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் ஆலை ஊழியர் 

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஆலையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ராணி (37). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

சம்பவத்தன்று ராணி அப்பகுதியில் நடந்த திருமண விழாவுக்கு நகைகளை அணிந்து செல்வதற்காக, தனது வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 9 பவுன் நகைகள் மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை 

இதுகுறித்த புகாரின்பேரில், வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராஜின் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் மர்மநபர்கள் கள்ளச்சாவி மூலம் வீட்டின் கதவு, பீரோவை திறந்து நகைகளை திருடிச் சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.