மாவட்ட செய்திகள்

விக்கிரமங்கலம் அருகே, மாட்டுவண்டி தொழிலாளியை கொலை செய்தவர் கைது + "||" + Near Wickramanagalam, The cow cart worker The murderer arrested

விக்கிரமங்கலம் அருகே, மாட்டுவண்டி தொழிலாளியை கொலை செய்தவர் கைது

விக்கிரமங்கலம் அருகே, மாட்டுவண்டி தொழிலாளியை கொலை செய்தவர் கைது
விக்கிரமங்கலம் அருகே மாட்டு வண்டி தொழிலாளியை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரமங்கலம், 

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள காங்கேயம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன்(வயது 42). மாட்டுவண்டி தொழிலாளி. இவரது நண்பர் மனோகர்(41). இவர் நேற்று முன்தினம் சவுந்தரராஜன் வீட்டிற்கு வந்தார். மாலையில் மனேகரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு அவரது வீட்டில் விட்டுவிட்டு திரும்ப தனது வீட்டிற்கு வந்து கொண்டு இருந்த சவுந்தரராஜனுக்கும், காங்கேயம்பேட்டையை சேர்ந்த கண்ணனுக்கும்(52) இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கண்ணன், சவுந்தரராஜனை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவானார். இதில் படுகாயம் அடைந்த சவுந்தர ராஜனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தலைமறைவாக இருந்த கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.