குழந்தைகள் உரிமை மீறல் குறித்து தேசிய உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம் - கலெக்டர் தகவல்


குழந்தைகள் உரிமை மீறல் குறித்து தேசிய உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 13 Jun 2019 10:45 PM GMT (Updated: 14 Jun 2019 5:43 PM GMT)

குழந்தைகள் உரிமை மீறல் குறித்து தேசிய உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம் என்று தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் 2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்ட பூர்வமான அமைப்பாகும். இந்த ஆணையமானது அரசியல் சட்டம் மற்றும் இதர குழந்தைகள் உரிமை மீறல், குழந்தைகளுக்கு என அனுமதிக்கப்பட்ட உரிமைகளை பெற்று தருவதை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் இந்த ஆணைய உறுப்பினர்கள் வருகை தந்து குழந்தைகளின் உரிமை மீறல் தொடர்பான புகார்களை பெற்று வருகின்றனர். இந்த முகாமில் அனைத்து குழந்தைகளும் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள், காப்பகத்தில் தங்கியிருப்போர், நிறுவனம் சார்ந்த குழந்தைகள், விடுதிகளில் தங்கி பயிலும் குழந்தைகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள உரிமைகள் மீறல் குறித்து புகார் அளிக்கலாம்.

இதுதவிர www.eb-a-a-i-n-d-i-an.nic.in -என்ற இணையதளத்தின் வாயிலாகவும் தங்களது புகாரை தெரிவிக்கலாம்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மாரிமுத்து, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ.வைத்திநாதன், பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயப்பிரிதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் குணசுந்தரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்திய நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story