மாவட்ட செய்திகள்

பெருந்துறை அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Love married woman commits suicide

பெருந்துறை அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெருந்துறை அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பெருந்துறை அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வரதட்சணை கொடுமை செய்ததாக பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளார்கள்.
பெருந்துறை,

ஈரோடு அசோகபுரத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருடைய மனைவி நந்தினி. இவர்களுடைய மகள் பூர்ணிமா (வயது 23). பெருந்துறை அருகே உள்ள துடுப்பதியில் கல்லூரியில் படிக்கும் போது பூர்ணிமாவுக்கும், உடன் படித்த விக்னேஷ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களின் காதலை பெண்ணின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார்கள். இருவரும் துடுப்பதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. விக்னேஷ் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லுக்கு வேைலக்கு சென்று வந்தார்.


இதற்கிடையே கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பூர்ணிமா வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் காணப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு விக்னேசும், பூர்ணிமாவும் தூங்கச்சென்றார்கள்.

இந்தநிலையில் நேற்று காலை விக்னேஷ் தூக்கம் கலைந்து எழுந்தார். அப்போது வீட்டின் விட்டத்தில் சேலையில் தூக்குப்போட்டு பூர்ணிமா பிணமாக தொங்குவது தெரிந்தது.

இதுபற்றி உடனே அவர் பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாகுமார், இன்ஸ்பெக்டர் அர்ஜூனன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகி 2½ வருடங்களே ஆவதால் ஈரோடு ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது,

இதற்கிடையே பெண்ணின் பெற்றோர் பெருந்துறை போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்கள். அதில், 'தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு பூர்ணிமா கோழை அல்ல. வரதட்சணை கேட்டு விக்னேஷ் கொடுமை செய்துள்ளார். என்மகள் தற்கொைல செய்துகொள்ள அவர்தான் காரணம். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்' என்று கூறி உள்ளார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. தீக்குளித்து பெண் தற்கொலை: ஸ்டூடியோ அதிபர் கைது
உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்ததால் பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்தது தொடர்பாக ஸ்டூடியோ உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
2. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் காதல் திருமணம் செய்த மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை
குன்றத்தூர் அருகே காதல் மனைவி கர்ப்பமாக இருக்கும்நிலையில், அவருடன் ஏற்பட்ட தகராறில் மெக்கானிக் தனது தாய் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
3. நெல்லையில் காதல் திருமணம் செய்த, புதுமாப்பிள்ளை சரமாரி வெட்டிக்கொலை - ரெயில் தண்டவாளத்தில் உடல் வீச்சு
நெல்லையில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ரெயில் தண்டவாளத்தில் வீசப்பட்டு கிடந்தது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய மனைவியின் அண்ணன்-உறவினர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில்: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
5. குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததால் தூக்கமாத்திரைகளை தின்று பெண் தற்கொலை
குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததால் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று கணவன்-மனைவி தற்கொலைக்கு முயன்றனர். அத்துடன் விஷமும் குடித்ததால் பெண் பரிதாபமாக இறந்தார்.